சென்னை: திருமண நிகழ்வு ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்தித்தனர். ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வரும் 13-ம் தேதி இந்தப் படம் திரையரங்கு முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே கல்பாத்தி அகோரமின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.