வேதாரண்யம் அருகே கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் விநோத நிகழ்ச்சி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேக, ஆராதனை, வீதியுலா நடந்தது. நேற்று வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத நிகழ்ச்சி நடந்தது. கோயில் அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து வாழைப்பழங்கள் பக்தர்கள் மீது வீசப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஒரு சிலர் வாழைப்பழங்களை ‘ ேகட்ச்’ செய்து வீட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

நேற்றிரவு சாமி வீதியுலா காட்சியும், தேரோட்டமும் நடந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவப்பொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்பு குதிரை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.  பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: