தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ₹2 லட்சம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு பகுதியை சார்ந்தவர் சமீஹா பர்வீன். இவர் கோழிக்கோட்டில் 7வது காதுகேளாதோருக்கான ஜுனியர் - சப்ஜூனியர்  சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ ஓட்டம் உள்ளிட்டவற்றில் முதலிடம் பெற்றார். மேலும்  போலந்து  நாட்டில்  நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம்  தாண்டுதலில் 7வது இடமும் பெற்றார். இவர் ஊக்கத்தொகை வழங்கிட தமிழக அரசிடம்  கோரிக்கை விடுத்திருந்தார். இவரது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வெற்றியாளர் உருவாக்கும் திட்டத்தில்சேர்க்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும், மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பயண கட்டணம் போன்றவைகளுக்காகவும் ஊக்கத்தொகையாக ₹2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.போலந்து நாட்டில் நடைபெற்ற  உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சமீஹா பர்வீன் (நீளம் தாண்டுதல், கே.மணிகண்டன் (நீளம் தாண்டுதல்), ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்)ஆகியோருக்கு  ஊக்கத்தொகையாக தலா ₹30 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது என இளைஞர் நலன் ,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: