நூல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ₹230க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ₹160ஐ வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தற்போது அனைத்து நூல்களின் விலையும் கிலோவிற்கு 30 ரூபாய் ரக வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் முடங்கிவிடும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். எனவே நூல்களின் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: