மார்க்சிஸ்ட் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 2வது முறையாக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 80 பேர் மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  

மாநில செயற்குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், வாசுகி, பி.சம்பத், செல்வசிங், வெங்கட்ராமன், நூர்முகமது, சண்முகம், குணசேகரன், கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன்(எம்.பி), பாலபாரதி, சாமுவேல்ராஜ், கண்ணன், சுகுமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி விதிப்படி, 72 வயது நிறைவடைந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்திரராஜன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை  முறியடிக்க கோயில் நிர்வாகத்தில் தலையீடு செய்யவுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சி வரும் 4ம் தேதி தமிழகத்தில் 500  இடங்களில் போராட்டம் நடத்த உள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும்  மக்களை தமிழக அரசு அப்புறப்படுத்த கூடாதுஎன வலியுறுத்தி மே 6ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: