பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 73 லட்சம் மரக்கன்று வளர்க்க ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில்  உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று வனத்துறைக்கான மேம்பாட்டு பணிகள் குறித்து வனத்துறை மண்டல வன  பாதுகாவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 73 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. தனியார் பட்டா நிலங்களில் அதிக அளவு மரக்கன்றுகளை வளர்க்க, விவசாயிகளை ஊக்கப்படுத்திட விவசாயிகள் வளர்க்கும் மரங்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றை வெட்டி விற்பதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும். வன விலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிப்பை தடுத்திட யானை புகா அகழிகள்,  மின்வேலிகள் அமைத்தல், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளையும், மயில்கள் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். வேட்டை காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றார்.

Related Stories: