தாம்பரம் மாநகராட்சியில் நியமன குழு உறுப்பினர், நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற 5 மண்டல குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில், திமுக தலைமை அறிவித்த 5 வேட்பாளர்களில் 4 பேரும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் மண்டல குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, நியமன குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் கணக்கு குழுவில் 6 பேர், பொது சுகாதார குழுவில் 6 பேர், கல்வி குழுவில் 6 பேர், வரிவிதிப்பு மற்றும் நிதி குழுவில் 6 பேர், நகரமைப்பு குழுவில் 6 பேர், பணிகள் குழுவில் 6 பேர், நியமன குழுவில் 6 பேர் என மொத்தம் 36 நியமன குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்தந்த குழுவில் யார் தலைவர் என தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நியமன குழு உறுப்பினராக பெருங்களத்தூர் சேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலைக்குழு தலைவர்கள்: கணக்கு குழு தலைவராக மதினா பேகம், பொது சுகாதார குழு தலைவராக நரேஷ் கண்ணா, கல்வி குழு தலைவராக கற்பகம் சுரேஷ், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவராக ரமணி ஆதிமூலம், நகரமைப்பு குழு தலைவராக நடராஜன், பணிகள் குழு தலைவராக சுந்தரி ஜெயக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: