லக்கிம்பூர் கெரி வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை: உ.பி. அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..!

டெல்லி: விவசாயிகள் மீது வாகன ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்ய உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப்பிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக் கொண்டும் போலீஸ் தரப்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசின் தலைமை செயலாளருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் தகவல் தெரிவிக்கவில்லை என்று மகேஷ் ஜெர்மனாலி தெரிவித்தார். இதனையடுத்து ஜாமீன் மனுவை ரத்து செய்யுமாறு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி கேட்டுக் கொண்டதன் அறிக்கை நகலை உத்தரப்பிரதேச அரசுக்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி லக்கிம்பூர் கெரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உத்தரப்பிரதேச துணை முதல்வர் ஆகியோருக்கு விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் வாகன மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

Related Stories: