ஆவடி மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்கள் பட்டியல்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் - நியமனக்குழு உறுப்பினர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் - நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக சார்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அதன்படி ஆவடி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் மண்டலம் - 1 வி.அம்மு, மண்டலம் - 2 எஸ்.அமுதா, மண்டலம் - 3 ராஜேந்திரன், மண்டலம் - 4 என்.ஜோதிலட்சுமி.

நிலைக்குழுத் தலைவர்கள் - நியமனக்குழு உறுப்பினர்: கணக்குக் குழுத் தலைவர் வீரபாண்டியன், பொது சுகாதாரக்குழுத் தலைவர் ராஜேஷ்குமார், கல்விக்குழுத் தலைவர் கீதா, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் சி.சுந்தரி நகரமைப்புக்குழுத் தலைவர் மாலா, பணிகள் குழுத் தலைவர் ஆசிம் ராஜா, நியமனக்குழு உறுப்பினர் சுமதி சோழா ந.கண்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: