காமராஜர் பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் உத்தரவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன், கடந்த 2019ம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக த்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாததால் நிர்வாக பொறுப்புகளை ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தலைமையில், பேராசிரியர் ராஜேந்திரன், பேராசிரியர் மருதமுத்து ஆகியோர் கொண்ட துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 136 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு கடந்த பிப்.4ம் தேதி சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில், 10 பேர் இறுதி செய்யப்பட்டு அப்பட்டியல் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.இந்தநிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமாரை நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கை: சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் ஜெ.குமார், கடந்த  2018ம் ஆண்டு பதிவாளராக பொறுப்பு ஏற்று இருந்த நிலையில், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார்.

Related Stories: