ஆம்பூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி-கலெக்டர் பங்கேற்பு

ஆம்பூர் :  ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளசாராயம் மற்றும் போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் மரணம், கண் பார்வை இழப்பு, உடல் நலக்குறைவு, நரம்பு தளர்ச்சி பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழத்தல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, கலெக்டர் அமர் குஷ்வாஹா, 24 மணிநேர புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 கொண்ட ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார். பின்னர், அனைவரும் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட கலால் உதவி ஆணையாளர் பானு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: