வடகிழக்கு பருவமழை நிவாரணம் கேட்டது ரூ.4,230.45 கோடி, ஒதுக்கியது ரூ.352.35 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: ஒன்றிய அரசிடம் எவ்வளவு தேசிய பேரிடர் நிதி கேட்டீர்கள். எவ்வளவு வந்துள்ளது என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் கேள்வி எழுப்பினார். 2021-22 வடகிழக்கு பருவமழைக்கு மொத்தம் நாங்கள் கேட்ட தொகை ரூ.4,230.45 கோடி. ஆனால், வந்தது ரூ.352.35 கோடிதான். தற்காலிக நிவாரணமாக ரூ.1510 கோடி கேட்டிருந்தோம். அந்த தொகையையும் கொடுக்கவில்லை. நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.4219 கேட்டிருக்கிறோம். மொத்தம் ரூ.4,230.45 கோடி கேட்டிருக்கிறோம். ஆனால் வந்தது ரூ.352.35 கோடி மட்டுமே.

Related Stories: