என் முன்பு செல்போனில் பேசுவியா என கூறி.... ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு சரமாரி அடி உதை: ரவுடி உட்பட 2 பேர் கைது

சென்னை: தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் வடமாநிலத்தை சேர்ந்த அபூர்வா பாவரி(31) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அபூர்வா பாவரி தனது உறவினரை நேற்று இரவு மருத்துவமனையில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது தனது உறவினர் உடல் நலம் குறித்து தனது குடும்பத்தினரிடம் அபூர்வா பாவரி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ராயப்பேட்டையை சேர்ந்த பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி ஹரி(40), தனது நண்பர் அருண்(38) உட்பட 4 பேருடன் மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அதிக சத்ததுடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததை பார்த்து, ரவுடி ஹரி என் முன்பு செல்போனில் பேசு கூடாது. இங்கிருந்து ஓடவிடு என்று கூறியுள்ளார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரவுடி ஹரி தனது நண்பர்களுடன் சேர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்துவிட்டார். பிறகு சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அபூர்வா பாவரி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபேதையில் இருந்த ரவுடி ஹரி மற்றும் அருண் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: