அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை: நிதியமைச்சர்

சென்னை: அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். பேரவையில் பேசிய நிதியமைச்சர், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மைனிங் கொள்கை உருவாக்கப்படும் என்றும் கூறினார். ரூ.1000 கோடியில் அரசு கல்லூரிகள் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Related Stories: