உள்ளாட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கு வாடகை பிரச்னைக்கு தீர்வு: தமிழக அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் சம விகிதமற்ற வாடகைப் பிரச்னைகளாலும், நீதிமன்ற வழக்குகளாலும் வாடகைத் தொகை நிலுவையில் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வாடகையை வணிகர்கள் இன்றுவரை செலுத்தி வருகிறார்கள்.  இது சம்பந்தமாக பேரமைப்பு சார்பில் அரசுக்கு பலமுறை முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.  இருப்பினும் கொடைக்கானல், நீலகிரி, பழனி, சென்னை பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை அரசு அதிகாரிகள் திடீரென சீல்வைக்க முனைந்துள்ளார்கள்.

பல ஆண்டுகளாக வணிகம் செய்துவரும் வணிகர்களுக்கு, அரசு தீர்வுகாண முனைந்துள்ள இவ்வேளையில், இந்த நடவடிக்கை வணிகர்களை மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த வாடகை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசு ஆய்வுக்குழு ஒன்று அமைத்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து, வெளியிடும் நியாயமான வாடகை அறிவிப்பை ஏற்றுக்கொள்ள வணிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசு தீர்வு காணும் வரை, வணிகர்கள் மீது, அரசு அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.

Related Stories: