பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் லக்‌ஷ்யா சென்னுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்ட தொடரில் இறுதி போட்டியில் விளையாட தகுதிபெற்ற லக்‌ஷ்யா சென்னுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்ட தொடரில் மிக இளம் வயதிலேயே லக்‌ஷ்யா சென் படைத்துள்ள சாதனை கண்டு பெருமை கொள்கிறேன். மதிப்புமிகுந்த இந்த அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில் விளையாட தகுதிபெற்ற ஐந்தாவது இந்திய வீரர் என பெயரெடுத்த லக்‌ஷ்யா சென், வரலாற்று சிறப்புமிக்க  வெற்றிக்கு மிக அருகில் வந்து அதை தவறவிட்டுள்ளார். வருங்காலத்தில் அவர் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: