சட்டப்பேரவை கூட்டத்தில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை என்பதை அறிவிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  ஆட்சிக்கு வந்தால், அரசுத்துறைகளில்  காலியாகவுள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய  பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தேர்தலின் போது  திமுக வாக்குறுதி அளித்திருந்ததால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும்,  பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள காலியிடங்களை  நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புதல் என நடப்பாண்டில்  குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை  நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: