அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி ேபட்டி

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: வேளாண் பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்திருந்தால்தான் பெரிய, பெரிய திட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். ஆனால் இந்த வேளாண் பட்ஜெட் உண்மையிலேயே விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட்டாக தான் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழை குடும்பத்திலே பிறந்த பெண்கள், திருமண வயதை எட்டுகின்ற பொழுது, பொருளாதார சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்ய இயலாமல் தடைபடுகிறது. அந்த தடையை நீக்கவேண்டும் என்பதற்காகதான் தொலைநோக்கு சிந்தனையோடு திருமண உதவித்திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து 25 ஆயிரம், 50 ஆயிரம் அளித்தார். தாலிக்கு தங்கம் முதற்கட்டமாக 4 கிராம் என அறிவித்தார். பிறகு 8 கிராமாக உயர்த்தினார்.

இப்படி ஏழை பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த அற்புதமான திட்டம் திருமண உதவித்தொகை திட்டம். தாலிக்கு தங்கம் திட்டத்தைக் கொண்டுவந்தார். வேண்டுமென்றே திட்டமிட்டு, அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக இந்த திட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். இந்த திட்டமட்டுமல்ல. அம்மா இருசக்கர வாகனம், 3 லட்சம் வாகனம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படவேண்டும் என்பதற்காக பிரதமரை நேரடியாக அழைத்து வந்து, கலைவாணர் அரங்கிலே ஆயிரக்கணக்கான மகளிருக்கு அளித்தோம். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரிய நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். பணி முடிந்தபிறகு வீடு திரும்பவேண்டும். அதற்காக மானிய விலையிலே அம்மா இருசக்கர வாகன திட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: