வங்கக்கடலில் 21-ம் தேதி புயல் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தெற்கு, உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 21-ல் குமரி, நெல்லை மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழ்நாட்டில் சித்தாறு, பேச்சிப்பாறை, சிவலோகம், சின்கோனா, ஆகிய இடங்களில் மட்டும் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் கிழக்கு வழங்கக்கடல் - தெற்கு அந்தமான் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. 20-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-ல் புயலாகவும் வலுவடையக்கூடும். புயலாக வலுவடைந்த பின் தென் கிழக்கு வங்கதேச கடலோர பகுதியில் நிலைபெறக்கூடும். இன்று அந்தமான் கடல் பகுதி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். நாளை அந்தமான் கடற்பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும்.

மார்ச் 21-ல் அந்தமான் கடற்பகுதி, வங்கக்கடலின் மத்திய கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மார்ச் 22-ல் மத்திய கிழக்கு வங்கக்கடல், மியான்மர் கடலோர பகுதிகளிலும் பலத்த சூறாவளி வீசக்கூடும். குறைந்தபட்சம் மணிக்கு 45 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பு; மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: