புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலி தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தமான் விரைவு: அரக்கோணத்தில் இருந்து தனி விமானத்தில் சென்றனர்

அரக்கோணம்: அந்தமான் நிக்கோபார் தீவில் புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தனி விமானத்தில் விரைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் புயல் மற்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் மீட்பு பணி மேற்கொள்வதற்காக, தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து நேற்று பேரிடர் மீட்பு படை வீரர்கள் புறப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையிலான 130 வீரர்கள், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பல்வேறு அதிநவீன கருவிகளுடன் நேற்று காலை 11 மணியளவில் தனி விமானத்தில் அந்தமான் நிக்கோபர் தீவுக்கு சென்றனர்.

Related Stories: