×

தஞ்சை பன்னீர் மசாலா

செய்முறை

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். தேங்காய், முந்திரி, கசகசா விழுதினை காய்கறிகளுடன் சேர்க்கவும். இதில் பச்சை மிளகாயை கீறி சேர்க்கலாம் அல்லது தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கலாம். விழுதுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து  பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

Tags :
× RELATED பால் சர்பத்