சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் தாக்கலாகிறது.

காலை 10 மணிக்கு காதிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். வரும் நிதியாண்டியில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு போன்றவை குறித்து ஆலோசித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெறும் ஆலோசனையில் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.

Related Stories: