அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ெதான்மை வாய்ந்த 65 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பரிசீலனை: வல்லுநர்குழு கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: தொன்மை வாய்ந்த 65க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் பரிசீலனை ெசய்யப்பட்டது. குழுவின் பரிசீலனைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அறநிலையத் துறையின் மாநில அளவிலான  வல்லுநர் குழுவின் 18வது கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், இணை ஆணையர்  சுதர்சன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கே.சந்திரசேகர் பட்டர் (ராஜா), கோவிந்தராஜ பட்டர், தலைமை  பொறியாளர் தட்சிணாமூர்த்தி, தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கே.மூர்த்திஸ்வரி, சீ.வசந்தி, சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சென்னை கங்காதரேஸ்வரர் கோயில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில், ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், தென்காசி மாவட்டம் மானகபேஸ்வரர் கோயில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஐயப்பன் கோயில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணமார் கோயில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் செல்லாண்டியம்மன் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர், ராஜகோபாலசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வேணுகோபாலசுவாமி கோயில், மயிலாடுதுறை மாவட்டம் வரதராஜபெருமாள் கோயில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம்  ஆஞ்சநேயசுவாமி கோயில், கடலூர் மாவட்டம், தில்லையம்மன் கோயில் உட்பட 65 கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: