×

ஸ்வீட் பணியாரம்

செய்முறை

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தைச் சுமார் 6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்கு மைய அரைக்கவும். அதனுள் சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய அவலைச் சேர்த்து அரைக்கவும். பொடித்த வெல்லம், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பணியாரக் கல்லைச் சூடு செய்து, சிறிது நெய்யைப் பணியாரக் குழியில் ஊற்றி அதன் மேல் கரைத்து வைத்த மாவைப் பணியாரக் குழியினுள் சேர்த்து, போதுமான நெய்யைச் சேர்த்துப் பணியாரத்தை இருபுறமும் திருப்பிப் போட்டு மொறு மொறு வெனச் சுட்டு எடுக்கவும். சுவையான ஸ்வீட் பணியாரம் தயார்.

குறிப்பு

* நார்ச்சத்து அதிகம் உள்ள வரகு, சாமை குதிரைவாலி அரிசியிலும் ஸ்வீட்  பணியாரம் செய்யலாம்.

Tags :
× RELATED தக்காளி கோதுமை தோசை