நாகை நகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்தி அசத்திய கலெக்டர்

நாகை: நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கம் குறித்த வார முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். இதில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் கலெக்டர் அருண்தம்புராஜ், திடீரென அருகில் உள்ள பிளஸ்2 வகுப்பறைக்குள் சென்றார். கலெக்டர் முன்வரிசையில் அமர்ந்து இருந்த மாணவியிடம் வேதியியல் பாடபுத்தகத்தை வாங்கி அதிலிருந்து சில கேள்விகளை கேட்டார். சில மாணவிகள் பதிலளித்தனர். சிலர் தயங்கினார். பின்னர் புத்தகத்தை வைத்து கலெக்டரே வேதியல் பாடத்தை மாணவிகளுக்கு நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, கேள்வி கேட்டால் தவறாக இருந்தாலும் எழுந்து பதில் சொல்ல வேண்டும். பிளஸ் டூ வகுப்பு பொதுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. நான் உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறேன். வரும் திங்கட்கிழமை வந்து தேர்வு வைப்பேன். நான் வைக்கும் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என கூறினார்.

Related Stories: