திண்டிவனம் அருகே பரபரப்பு ரகளையில் ஈடுபட்ட இளைஞர் போலீசாருக்கு பயந்து கிணற்றில் குதித்தார்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர், போலீசாரை கண்டதும் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே வடமாநில இளைஞர் ஒருவர் சாலையோரம் இருந்த கடை மற்றும் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது அந்த இளைஞர் போலீசாருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அவனம்பட்டு எல்லையில் உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்தார். பின்னர் கிணற்றில் இருந்து மேலே ஏறி வர மறுத்ததால், மயிலம் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிணற்றில் தத்தளித்த வடமாநில இளைஞரை கயிறு மூலம் மீட்டனர். பின்னர் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: