நான்சச் எஸ்டேட் பகுதி அரசு பள்ளியில் வகுப்புறை, சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய கரடி

குன்னூர் : குன்னூர் அருகே  நான்சச் எஸ்டேட் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் கரடி உணவு தேடி  வகுப்பறை மற்றும் சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து உணவை தேடி வரும் கரடிகள் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூர் நான்சச்எஸ்டேட் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இரவு நேரத்தில் உணவு தேடி புகுந்த கரடி, பள்ளி வகுப்பறை கதவுகளை சேதப்படுத்தி உள்ளே சென்றது. அருகில் உள்ள சத்துணவு கூடத்தை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது.

இதுகுறித்து வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.  ஏற்கனவே கரடி 3 முறை பள்ளியை சேதப்படுத்தி உள்ளன. எனவே, இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியில் புகுந்து வகுப்புறை, சத்துணவு கூடத்தை கரடி சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: