உக்ரைனுக்கு லியோனார்டோ டிகாப்ரியோ ரூ.77 கோடி நன்கொடை

லாஸ்ஏஞ்சல்ஸ்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். டைட்டானிக் ஹீரோலியோனார்டோ டிகாப்ரியோ. தன்அறக்கட்டளை மூலமாக பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.77 கோடி) உக்ரைனுக்கு நன்கொடையாக தருவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை அமெரிக்காவிலுள்ள சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: