வாணியம்பாடி நகரில் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்: டிஐஜி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பெருகிவரும் கள்ளச்சாராயத்தால் மதுவிலக்கு அமல் பிரிவு செயல்படுகிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் நேதாஜி நகர்,  பெருமாள் பேட்டை லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு கள்ளச்சாராயமும், போலி மது பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் பெருமாள் பேட்டை கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பின்புறம் காலி இடத்தில் தினசரி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிக அளவு கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. அவ்வழியே போவோர் வருவோரையும் இங்கு குடித்துவிட்டு வருவார்கள் வீண் தகராறில் ஈடுபடுகின்றனர்.

இதே பகுதியில் தான் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் காவல் நிலையம் உள்ளது. மேலும் அங்குள்ள பாலத்தின் அருகே தினசரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பணியில் உள்ளனர். இருப்பினும் அதன் அருகே கள்ளச்சாராயம் திறந்தவெளி மார்க்கெட் போல விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குறிப்பாக வாணியம்பாடி நகரில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம், பெட்டி கடைகள் தோறும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேலூர் சரக டிஐஜி முன் வருவாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: