7 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 292 பேருக்கு கொரோனா: ஒருவர் மட்டுமே உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 292  பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்  நேற்று 53,194 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 3,950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை  பெற்று வந்த 778 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,08,373 ஆக  உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. அதன்படி இதுவரை 38,010 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 83  பேர், கோவை 43, செங்கல்பட்டு 34 பேருக்கும், அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. மேலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 15க்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: