×

சோயா பிரியாணி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் முந்திரியை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியவுடன் தக்காளி, உப்பு, கொத்தமல்லி, புதினா, தயிர், பிரியாணி மசாலா சேர்த்து வேக வைக்கவும். பின் சோயாவை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கினால் சோயா பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சோயா சில்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பிரியாணி மசாலா செய்யும் முறையை முன்பக்கத்தில் காண்க.

Tags :
× RELATED காஷ்மீர் புலாவ்