கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது

சென்னை: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து 3ம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் விழாவுக்கு முந்தைய 40 நாளை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக  அனுஷ்டிக்கின்றனர். இந்த விரத நாட்களில் ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து  மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதன்கிழமையன்று தொடங்குகிறது. அதன் அடிப்படையில் நேற்று சாம்பல் புதன்  கடைபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து  கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் திருப்பலிகள் நேற்று காலை 6 மணி முதல் நடந்தன. திருப்பலியின்போது, ஆலயத்திற்கு வந்தவர்களின் நெற்றியில்  சாம்பல் குறி இடப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தை அறிவுறுத்துகிறது. இதையடுத்து, ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு  வெள்ளிக் கிழமையும் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடைபெறும். ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 17ல் கொண்டாடப்பட உள்ளது.

Related Stories: