ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா

கோவை: கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆதி யோகி முன்னிலையில் நேற்று நடந்தது. விழாவில் 170 நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்தியாவுக்கான கொலம்பியா நாட்டு தூதர் மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் நடிகர் அருண் விஜய், நடிகை கங்கணா ரணாவத் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்றனர்.

விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் செய்யும் உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். ஆகவே, உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மகாசிவராத்திரி நாளில் ஏற்றி விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும். உங்கள் உயிர் சக்தியை தெம்பாக்கி வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றி காட்டுங்கள். கொரோனா பெருந்தொற்றால் இழந்த உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுப்போம். இவ்வாறு ஜக்கி வாசுதேவ் பேசினார்.

Related Stories: