கோவை, திருச்சி மாநகராட்சியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி..!

கோவை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றுகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் டெபாசிட்டை இழந்தும், படுதோல்வியையும் தழுவி வருகிறது. அந்த வகையில் கோவை, திருச்சி மாநகராட்சியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது அதிமுக.

கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மாநகராட்சியிலும் 2வது இடத்தை காங்கிரஸ் கட்சியே பிடித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் திமுக 42 இடங்களில் வென்ற நிலையில் காங்கிரஸ் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 2வார்டுகளில் மட்டுமே வென்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிக்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கம்யூனிஸ்ட் காட்சிகளை விட அதிமுக குறைவான இடங்களையே வென்றுள்ளது.

இதுவரை முடிவுகள் வெளியான 85 வார்டுகளில் திமுக கூட்டணி 81 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 4, மதிமுக 3, எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை கோவை மேயர் பதவியை பிடித்த அதிமுக தற்போது வெறும் 3 வார்டுகளை மட்டுமே பிடித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகளை விட அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்டதால் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: