நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான் மகன்கள் அசத்தல் வெற்றி..!!

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் நாசர் மகன் அசீம் ராஜா வெற்றி:

ஆவடி மாநகராட்சி 4-வது வார்டில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் அசீம் ராஜா 626 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா போட்டியிட்டார். ஆவடி மாநகராட்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜாவுக்கு துணை மேயராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் வெற்றி:

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவியில் வெற்றிபெற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கே.எஸ்.மஸ்தானின் மகன் மொக்தியார் செஞ்சி பேரூராட்சியில் 7-வது வார்டில் போட்டியிட்டார். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவர், செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை குறிவைத்து உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கினார். அமைச்சர் மஸ்தான் மீது முதல்வர் ஸ்டாலின் கொண்டுள்ள நன்மதிப்பு காரணமாகவே மொக்தியாருக்கு சீட் கிடைக்கப்பெற்றது. அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மகன் மொக்தியார் ஆகிய இருவரை பொறுத்தவரை மதமாச்சரியங்களை கடந்து அனைத்து சமுதாய மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: