அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் போட்டியிடுகிறார். இவர், நேற்று வடக்கு கொரட்டூர் பகுதிகளான டி.வி.எஸ் நகர், அன்னை நகர், வாட்டர் கெனால் ரோடு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் உஷா நாகராஜ் கூறுகையில், `அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் வடக்கு கொரட்டூர் பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பேன்’ என்றார்.