முருகன் கோயில் விலக்கு ஒருவழிப்பாதையாகுமா? சிவகாசி வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சிவகாசி :  சிவகாசி வடக்கு ரதவீதி முருகன் கோயில் விலக்கில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி நகரின் நான்கு ரத வீதிகளிலும்  நடைமுறைப்படுத்தியுள்ள ஒரு வழிப்பாதை வாகனப்போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைத்துள்ளது.

 இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடிகிறது. இதே போன்று சிவகாசி முருகன் கோயில் விலக்கில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் வாகனங்கள் இருபுறமும் செல்வதால் பகல் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் மாலை நேரங்களிலும் காரனேசன் காலனி, திருத்தங்கல் சாலை பகுதியில் இருந்து சிவகாசி நகருக்குள் வரும் வாகனங்களால் இந்த சாலையில் நாடார் லாட்ஜ் பாலத்தில் இருந்து முருகன் கோயில் விலக்கு வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க முருகன் கோயில் விலக்கில் இருந்து திருத்தங்கல் சாலையில் நாடார் லாட்ஜ் பாலம்   வரை ஒரு வழிபாதையாக மாற்ற வேண்டும். காரனேசன் காலனி பகுதியில் இருந்து சிவகாசி நகருக்குள் வரும் கார், டூவீலர்களை  நாடார் லாட்ஜ் பாலத்தில் இருந்து மருதுபாண்டியர் மடத்து தெரு சாலை வழியாக திருப்பி விட வேண்டும்.

 இதன் மூலம் சிவகாசி நகரில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்களில் பயணிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Related Stories: