×

வெள்ளரிக்காய் கூட்டு

செய்முறை :

கடலைப்பருப்பை 45 நிமிடம் ஊற வைக்கவும். வெள்ளரிக்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பல்லாரி, தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து பூண்டு, இஞ்சித்துருவலை சேர்த்து வதக்கவும். பின்னர் பல்லாரி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்க்கவும். 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி ஊற வைத்த பருப்பு, 1/2 கப் தண்ணீர், நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து 2 விசில் விடவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கலக்கி ஒரு கொதி விடவும். கொத்தமல்லியை தூவி இறக்கவும். உடலுக்கு குளிர்ச்சியான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

Tags :
× RELATED வெள்ளரிக்காய் கூட்டு