அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நான்ஸ்டிக் தவா பறிமுதல் -அருப்புக்கோட்டையில் பரபரப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நான்ஸ்டிக் தவா அதிமுக பிரமுகரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காந்தி நகர் பூபால நகரில் அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் புதிதாக கட்டி வரும் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நான்ஸ்டிக் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து பறக்கும்படை அலுவலரும், துணை வட்டாட்சியருமான திருப்பதி, சிறப்பு எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது 14 அட்டை பெட்டிகளில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 420 நான்ஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: