திருச்சியில் 14 காவல் நிலையங்களுக்கு அதிநவீன பேட்ரோல் வாகனங்கள்-கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருச்சி : திருச்சி மாநகர காவல்துறையில் 14 சட்டம், ஒழுங்கு காவல் நிலையம், 6 குற்றப்பிரிவு, 4 மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளது. தற்போது திருச்சி மாநகர காவல் துறை தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாக பேட்ரோல் வாகனங்களில் போலீசார் பாதுகாப்பு மற்றும் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிக்காக பீட்டா போலீசார் என பைக்கில் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் திருச்சி மாநகர போலீசில் உள்ள 14 சட்டம்,ஒழுங்கு காவல் நி்லையத்திற்கு 14 பேட்ரோல் வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்களில் போதிய வசதிகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததை அடுத்து புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்த வாகனங்களை நேற்று திருச்சி மாநகர ஆயுதப்படையில் அந்தந்த காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர கமிஷனர் கார்த்திக்கேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது தெற்கு துணை கமிஷனர் முத்தரசு, வடக்கு துணை கமிஷனர் சக்திவேல் உடனிருந்தனர்.

தொடர்ந்து புதியதாக வழங்கப்பட்ட பேட்ரோல் வாகனத்தில் அதிநவீன கேமராக்கள், ஜிபிஎஸ் கருவி, விஎச்எப் மைக், ஏசி, பின்பக்கம் பார்க்கும் வசதி கொண்ட கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட அனைத்து வடிவமைப்புகளும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக 14 காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சரக உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேட்ரோல் போலீசாரிடம் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அவசர அழைப்பிற்கு உடனே சென்று சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கி பேசினார்.

Related Stories: