நீட் வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு: அனில் சட்கோபால்

சென்னை: நீட் வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு என பேராசிரியர் அனில் சட்கோபால் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு சட்ட விதிமீறலாக இருக்காது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகம், உயர்கல்வி ஆகியவை பொதுப்பட்டியலில் மட்டுமின்றி மாநில பட்டியலிலும் உள்ளன. பல்கலை. தொடங்குதல், மூடுதல், முறைப்படுத்தலுக்கு மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை. மாணவர் சேர்க்கை சார்ந்த முடிவை மாநிலங்கள் எடுக்க உச்சநீதிமன்றம் உரிமை வழங்கி இருக்கிறது. ஒன்றிய, மாநில அரசின் சட்டங்களுக்கு இடையே முரண் இருந்தால், குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தால் மாநில அரசு சட்டத்தை அமல்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

Related Stories: