பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார் ராகுல் காந்தி..!

லூதியானா: 177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு, அக்கட்சி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்று மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது. பஞ்சாப் மாநிலம் லூதினியாவில் நடைபெற்ற காணொலி பரப்புரை கூட்டத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; சரண்ஜித் சிங் சன்னி முதல்-மந்திரி வேட்பாளர் என அறிவிப்பு வெளியிட்ட பின்  அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories: