கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் போது இந்திய மக்களும், இலங்கை மக்களும் இணைந்து  கொண்டாடுவது வழக்கமானது. இது இந்திய இலங்கை நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமைகிறது. ஆனால் நடப்பாண்டில் நடைபெற இருக்கின்ற கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் தமிழக மீனவர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். கொரோனாவைக் காரணம் காட்டி இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியர்களும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பங்கேற்க விரும்புகிறார்கள். இந்திய இலங்கை நாடுகளின் நல்லுறவின் அடிப்படையில், வருங்கால வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் வகையில் நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும்.

எனவே ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: