×

இறால் புட்டு

செய்முறை

முதலில் அரிசி மாவை இடியப்ப மாவு போல் திரட்டி எடுக்கவும். அரிசி மாவில்  உப்பு கொதிநீர் கலந்து (தேவையான அளவு மட்டும்) குழைத்து எடுக்கவும். அதனை ஒரு எலுமிச்சையை விட சற்று பெரிய உருண்டைகளாகப் பிரித்து எடுக்கவும்.  பின் எண்ணெய் காய வைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் பொடிகளை சேர்த்து இறால் சேர்த்து கறிவேப்பிலை தூவி வதக்கவும். பின் 15 நிமிடம் தண்ணீர் வற்ற விட்டு எடுக்கவும். பின் உருட்டி வைத்த மாவை தட்டையாக எடுத்துக் கொள்ளவும். பின் அதன் நடுவில் இறால் மசாலா ஒரு ஸ்பூன் வைத்து அதனை உருண்டையாக உருட்டி விடவும். பின் தேங்காய் திருவில் பிரட்டி எடுத்து அதனை ஆவியில் கொழுக்கட்டை அவிப்பது போல் அவித்து எடுக்கவும். சுவையான இறால் புட்டு ரெடி.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி