எஸ்.பி.எஸ் ஜூவல்லரி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகாரளிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு

சென்னை: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வடபழனி 100 அடி சாலை, எல்லைமுத்து அம்மன் கோயில் தெருவில் இயங்கி வந்த எஸ்.பி.எஸ். ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தார் நகைச்சீட்டு நடத்தி, அதன் மூலம் தீபாவளி பண்டிகை நாளில் தங்க நகையாகவோ, வெள்ளி பொருட்களாகவோ வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தனர். அதன்படி கடந்த 2017 முதல் 2018 வரை பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை உறுதியளித்தபடி கொடுக்காமல் ஏமாற்றி, நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்ேடார், பொருளாதார குற்றப்பிரிவு II காவலர் பயிற்சி பள்ளி வளாகம், அசோக் நகர், சென்னை -83 என்ற முகவரியை அணுகி புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: