×

குதிரைவாலி தேங்காய்ப்பால் சாதம்

செய்முறை

குக்கரில் சுமார் 1/2 மேஜைக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய குதிரைவாலி அரிசியை சேர்த்து குறைவானத் தீயில் அரிசி உடையாமல் வதக்கவும். கூடவே நறுக்கிய மல்லித்தழை, இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து 2 விசில் விட்டு இறக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் சேர்த்து சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், சிறு துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலையை தாளித்து சாதத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

Tags :
× RELATED குன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி வரத்து அதிகரிப்பு