கழுத்து நிறைய நகைகளோடு தகதகவென மின்னிய வேட்பாளர்

சேலம்: சேலம் மாநகராட்சி 13வது வார்டில் போட்டியிடுவதற்காக அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு  மனுதாக்கல் செய்வதற்காக வந்த தேமுதிக வேட்பாளர் நாராயணன், வெள்ளை வேட்டி, சட்டையோடு, கழுத்து நிறைய தங்க, வைர நகைகளோடு மின்னிக்கொண்டு இருந்தார். சுற்றுமுற்றும் இருந்த வேட்பாளர்களும், இதர கட்சியினரும் இவரை வேடிக்கை பார்த்து, இவ்வளவு நகையா என பெருமூச்சு விட்டனர். அதிலும் மனுதாக்கலுக்கு வந்திருந்த

வேட்பாளர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள், பெண் வேட்பாளர்களாக இருந்தனர். அவர்கள், மின்னிய வேட்பாளரை பார்த்து, நம்மகிட்ட இவ்வளவு நகை இல்லையே என்ற ஏக்கத்தோடு பார்த்தனர். அங்கிருந்த ஒரு அலுவலர், சார் அப்படியே பக்கத்து ரூம் வரைக்கும் வர முடியுமா, லைட்டா கழுத்தில் கை வச்சிக்கிறேன்னு சொன்னார். அட போங்க பாஸ், எல்லாமே கவரிங்... நகைக்கடைனை தள்ளுபடி செய்யனுமுன்னு இப்படி வந்து மனு தாக்கல் செய்திருக்கேனு அவர் சொல்ல, அங்கிருந்த அனைவரும் அப்ப சரி, நீங்க கிளம்பலாமென அனுப்பி வைத்தனர்.

Related Stories: