கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை கலெக்டர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர், தூர்வாரும் ஏரி, நூலகம், சாலை ஆகியவற்றோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் தேவைக்காக ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சேவை கட்டிடம், நூலகம், வருவாய் அலுவலகங்கள், அங்கன்வாடி, பள்ளிகள், பசுமை வீடு, கால்நடை தார்சாலை, நீர்த்தேக்கத் தொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலகம், ஏரி குளங்கள், தரைப்பாலம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யவேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று நேற்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக ஆல்பி ஜான் வர்கீஸ் புதுவாயில் ஊராட்சி நூலகம், ஏரி, ஏ.என்.குப்பம் ஊராட்சியில் ஆர்.என்.கண்டிகை வரை உள்ள சாலை, கெட்ணமல்லி ஊராட்சியில் மேம்பாலம், புதிதாக கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை ஆய்வுசெய்தார். அப்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏழை, எளிய மக்களிடம் நேரடியாக சென்று உங்களுக்கு தினந்தோறும் வேலை கொடுக்கப்படுகிறதா, வேலை செய்ததற்கான சம்பளம் வருகிறதா என கேட்டறிந்தார். அதை தொடர்ந்து பெரிய விளம்பரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். இவருடன் திட்ட இயக்குநர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேலு உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், பொறியாளர் ஐசக், ஊராட்சி தலைவர்கள் ராஜசேகர், அம்மு விநாயகம், செவ்வந்தி மனோஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: