ராஜேந்திரபாலாஜி கொரோனா: நெகட்டிவ் சான்றிதழ் போலீசில் ஒப்படைப்பு

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போலீஸ் சம்மனையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம்  வந்தார். அவருக்கு 7 நாட்களுக்கு முன் கொரோனா இருந்ததால், நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே விசாரணை அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். நெகட்டிவ் சான் றிதழ் இல்லாததால்அவர்   புறப்பட்டு சென்றார்.  இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் முத்துப்பாண்டி, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று அவருக்கான கொரோனா நெகட்டிவ் சான்றிதழை அளித்தார்.

Related Stories: