அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்.: ஜே.பி.நட்டா அமைத்த பாஜக குழு விசாரணையை தொடங்கியது

அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக ஜே.பி.நட்டா அமைத்த பாஜக குழு விசாரணையை தொடங்கியது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவி லாவண்யா(17 வயது), விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். அந்த  விடுதியின் வாடன் மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாலேயே அவர் விஷம் குடித்து இறந்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இதனால், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒரு குழுவை அமைத்தார்.  நான்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழு நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விவரங்களைச் சேகரித்து, அதன் விவரங்களை அறிக்கையாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி அந்த குழுவில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. சந்தியா ராய், தெலுங்கானா முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி, மகாராஷ்டிராவின் சித்ரா மற்றும்  கர்நாடகாவின் கீதா ஆகியோரை இடம்பெற்று இருந்தனர்.

இவர்கள் தற்போது தற்கொலை தொடர்பாக மாணவியின் பெற்றோர், சகோதரர்களிடம் நேரில்சென்று  விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: